பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டியிருந்த பாம்பு பத்திரமாக மீட்பு!
பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டி நகர முடியாமல் இருந்த நாகத்தை பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டார்.
கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், தொழிலாளர்கள் அட்டை பெட்டி பாக்ஸை எடுத்து அடுக்கி வந்தனர்.
அப்போது 3 அடி நாகப்பாம்பு ஒன்று அட்டை பெட்டியில் இருந்தது. அந்த நாக பாம்பு அட்டை பெட்டியில் பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டி தவித்து உள்ளது. இது குறித்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையிலுள்ள பாம்பு பிடி வீரர் மோகன்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: திசை மாறிய மிக்ஜாம் புயல்: டிச.5-ல் நெல்லூர் – மச்சிலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என தகவல்!
பாம்பு பிடி வீரர் மோகன் அட்டை பெட்டியில் ஒட்டியிருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். இதனால் டேப்பில் தலை சுற்றி நகர முடியாமல் போராடிய நாக பாம்பு அதிலிருந்து விடுபட்டு வழக்கமான இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் அதனை வன பகுதியில் பத்திரமாக விட்டனர்.
நாகப்பாம்பு உயிருக்கு போராடிய நிலையில் அதனை மீட்ட பாம்பு பிடி வீரரான மோகனுக்கு தனியார் பொறியியல் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் நன்றி பாராட்டினர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.