"CAA ரத்து , ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமசங்கள் :
- புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்
- பா.ஜ.க.வின் வணிகமயமான, மத ரீதியிலான கல்வி திட்டங்கள் திரும்ப பெறப்படும்
- நிதி ஆயோக் கலைத்து விட்டு, மீண்டும் திட்டக்குழு ஏற்படுத்தப்படும்
- MGNREGA குறைந்தபட்ச ஊதியம் 700 ஆக்கப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்
- பழைய பென்சன் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
- புதுவை மற்றும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
- சுகாதாரம் , கல்விக்கான நதி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- சி.ஏ.ஏ ரத்து செய்யப்படும்
- மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு காத்திருக்காமல், பெண்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
- நகர்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம் இயற்றப்படும்
- மாநிலங்களில் ஆளுநர்களின் பதவி நீக்கப்படும்
- கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும. வகையில் ஆளுநர் பதவி என்பது நீக்கப்படும்
- தேர்தல் ஆணத்தின் சுதந்திரமான செயல்பாடு மற்றும் தனித்தன்மை உறுதி செய்யும் வகையில் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் அதிகார மையத்தின் தலையீடு களையப்படும்
- நுழைவுத் தேர்வுகள் உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்
- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்கப்படும்
- PM cares நிதி விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்
- நாடாளுமன்ற கூட்டத்தொடர் 120 நாட்கள் நடைபெறுவது கட்டாயம் என்ற முறையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
- சமூக நல மற்றும் அரசின் நல திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும்இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
" மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு வீழ்த்தப்பட வேண்டும். பா.ஜ.க வீழ்த்தப்படவில்லை என்றால் நாட்டில் ஜனநாயகம் வீழ்ந்து சர்வாதிகாரம் தலைதூக்கும். கூட்டாட்சியை, மதசார்பின்மையை காப்பாற்றப்பட வேண்டுமெனில் பா.ஜ.க நிச்சயமாக வீழ்த்தப்பட வேண்டும். தேர்தலில் வாக்குகளை பெறும் நோக்கில் கச்சத்தீவு பிரச்சனையை தற்போது பிரதமர் மோடி எழுப்புகிறார். கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்களுக்காக பிரதமர் மோடி என்ன செய்தார்.?