Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தல் பார்வையாளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

01:43 PM Nov 11, 2023 IST | Web Editor
Advertisement

சட்டத்திற்கு புறம்பான நடத்தை மற்றும் விதிமீறல் காரணமாக மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பணியில் இருந்த தேர்தல் பார்வையாளர்கள் 3 பேரை இந்திய தேர்தல் ஆணையம் அப்பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7-ம் நிறைவடைந்தது. சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், மத்திய பிரதேச வாக்குப்பதிவும் நவம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் பதிவான வாக்குகள் டிசம்.3-ஆம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பணியில் இருந்த தேர்தல் பார்வையாளர்கள் மூன்று பேரை சட்டத்திற்கு புறம்பான நடத்தை மற்றும் விதிமீறல் காரணமாக இந்திய தேர்தல் ஆணையம் அவர்களை தேர்தல் பார்வையாளர்கள் பணியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

சத்தீஸ்கரின் தண்டேவாரா தொகுதியில் தேர்தல் பார்வையாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி லால்தீன்குமா ப்ராங்க்ளினை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக அனுராக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் சியோனி மால்வா மற்றும் ஹோசங்காபாத் தொகுதியில் பொறுப்பில் இருந்த உதய நாராயண் தாஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கிரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மிசோரம் மாநிலத்தின் லங்லே மாவட்டத்தில் தேர்தல் செலவுப் பார்வையாளராக இருந்த ஐஆர்எஸ் அதிகாரி கௌரவ் அவஸ்தி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

Tags :
ChhattisgarhdismissedECIELECTION COMMISSION OF INDIAMadhya pradeshMizoramNews7Tamilnews7TamilUpdatesPool Observers
Advertisement
Next Article