Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெள்ள பாதிப்பு - தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்!

09:51 PM Dec 23, 2023 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு
அமைப்புகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் 5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கோபிசெட்டிபாளையம் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:  “கனமழையினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்கள் கட்டணமின்றி வழங்கப்படும்” – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் 1000 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.  மேலும் மாநில செயற்குழு உறுப்பினர் பயாசுதீன்,  திமுக நெசவாளர் அணியின் மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், கோபி நகர்மன்ற தலைவர் நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, கோபி நகர தலைவர் ஆடிட்டர் சம்சுதீன்,  மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலீம் ராஜா,  மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ஜியா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Tags :
floodsHeavy rainfallnews7 tamilNews7 Tamil UpdatesrainfallSouth Floodstamil naduTN Floods
Advertisement
Next Article