Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கும் பணி- டிச. 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்!

05:48 PM Dec 15, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜம் புயல் நிவாரணத் தொகை வழங்குவதை வருகிற டிச. 17 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

Advertisement

தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டது. மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகைக்கு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகை வழங்குவதை தொடக்கிவைக்கிறார். சென்னையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில் அஷ்டலக்ஷ்மி நகரில் முதல்வர் இதனை தொடக்கிவைக்க உளளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

Tags :
Chenai RainChennaiChennai FloodChennai Flood Reliefnews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduTN GovtTn Rains
Advertisement
Next Article