வெளியானது "கேப்டன் மில்லர்" படத்தின் FDFS - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
10:03 AM Jan 12, 2024 IST
|
Web Editor
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் நாள் காட்சி இன்று வெளியானது. இப்படத்தை காண தனுஷின் ரசிகர்கள் பிரம்மாண்ட கட்அவுட்கள், பேனர்கள் வைத்தும் பட்டாசு வெடித்தும் திரையரங்குககள் முன்பு கொண்டாடி வருகின்றனர். இந்த படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கேப்டன் மில்லர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைக் காண தனுஷின் இரண்டு மகன்களும் கோயம்பேடு ரோஹினி திரையரங்கத்திற்கு வருகை தந்தனர். தேவதையை கண்டேன், பட்டாஸ், குட்டி ஆகிய படங்களின் வரிசையில் பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் படம் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பொங்கல் முதல் நாள் முதல் காட்சி இன்று வெளியானது.
Advertisement
இயக்குனர் அருண் மாதேஸ்வரன், ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கியுள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
மேலும் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் படப் பிரியர்கள் இந்த படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் காண இந்த ஏற்பாட்டை படக்குழு செய்துள்ளனர். உலகளவில் 900 திரைகளுடன் தனுஷின் மிகப்பெரிய வெளியீடாக இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

Next Article