Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது லால் சலாம் | ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்...!

09:25 AM Feb 09, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்' படம் இன்று வெளியாகியுள்ளது.  

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் மூன்றாவது படம் லால் சலாம். இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார்.

லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் படம் என சொல்லப்படுகிறது.

இப்படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக இயக்குகிறார். இப்படத்தை விஷ்ணு ரங்கசாமி எழுதியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று (பிப்ரவரி 9 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில்,லால் சலாம் படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்த நடிகர் விஷ்னு விஷாலுக்கு ரசிகர்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர்.  குறிப்பாக  ரோகிணி திரையரங்கில் ₹3 லட்சம் செலவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ரசிகர்களால் பிரம்மாண்டமான மலர் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. 

https://www.facebook.com/news7tamil/videos/927155091898181/

Advertisement
Next Article