‘குபேரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ராயன்’. இப்படம் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘இட்லி கடை’ படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார்.
மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். குபேரா படம் தனுஷின் 51-வது படமாக உருவாகி வருகிறது. இதில் தனுஷ் உடன் ரஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ளது.
சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதைத்தொடர்ந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.