Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ‘லவ் மேரேஜ்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
09:24 PM Jun 06, 2025 IST | Web Editor
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ‘லவ் மேரேஜ்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

கடந்த 2023-ல் வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஹிட் கொடுத்தது. அதே ஆண்டு ‘ரெய்டு’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஓராண்டுக்கும் மேலாக அவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இதற்கிடையே, அவர் அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘Ghaati’ எனும் தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertisement

இதையும் படியுங்கள் : ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை காசாவில் ரூ.2,300… சர்க்கரை, காபி விலை இவ்வளவா?

தொடர்ந்து, அவர் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'லவ் மேரேஜ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தின் கதையை 'டாணாக்காரன்' பட இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார். இதில் சுஸ்மிதா பட், மீனாக்‌ஷி தினேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

முன்னதாக, இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியாகுமென படக்குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags :
love marriagemovie updatenews7 tamilNews7 Tamil Updatesrelease dateSushmitha Bhattamil cinemaVikram Prabhu
Advertisement
Next Article