பனிச்சுமை காரணமாக உயிரை மாயித்துக் கொண்ட இளைஞர்! உறவினர்கள் சாலை மறியல்!
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் ரஞ்சித் (22). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு ரஞ்சித்துக்கு பணியின் போது உணவு இடைவேலை கூட வழங்காமல் தொடர்ந்து வேலை வாங்கியுள்ளனர். அதனால் பணி அழுத்தம் தாங்கமுடியாமல், ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வந்த வாடகை வீட்டில் கடிதம் எழுதி
வைத்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் அக்கடிதத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு மாருதி எண்டர்பிரைசஸில் வேலை செய்யும் மாரியப்பன், ஐயப்பன் கொடுத்த பணி சுமை மற்றும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது தான் காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஸ்ரீபெரும்புதூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாகியிருக்கும் ஐயப்பன் மற்றும் மாரியப்பனை தேடி வருகின்ற்னர். இதற்கிடையே ரஞ்சித்தின் தற்கொலைக்கு நீதி கேட்டு செங்கல்பட்டில் இருந்து அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் ஒரு கட்டத்தில் ரஞ்சித்தின் உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் எதிரே இருக்கும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து ரஞ்சித்தின் தற்கொலைக்கு நீதி வேண்டும் எனவும் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டியும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின் அவர்கள் அனைவரையும் போலீசார் சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ரஞ்சித்தின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.