Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விடாமுயற்சி திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா?; வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்!

12:48 PM Dec 11, 2023 IST | Web Editor
Advertisement

அஜர்பைஜானில் இருந்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரலமானவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.  இவர் கண்டநாள் முதல்,  மாநகரம், கசட தபற, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ரெஜினாவின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது.  இவரது படங்கள் ஓடிடி தளங்களிலும்  நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில், ரெஜினா கேசன்ட்ரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.  ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் மகிழ் திருமேனி,  அஜித் குமார் உள்ளிட்ட படக்குழுவினர்  படப்பிடிப்பிறக்காக அஜர்பைஜான் சென்றுள்ளனர். அங்கு சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை ரெஜினா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் அஜர்பைஜானில் இருப்பதாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வரும் நெட்டிசன்கள்,  'விடாமுயற்சி' படத்தில் ரெஜினா நடிப்பது உறுதியாகியுள்ளதாக கூறி வருகின்றனர்.

Tags :
#MovieUpdateajithAjithkumarak62azerbaijancinemaKollywoodMagizhThirumeniNews7Tamilnews7TamilUpdatesRejinaCassandrashootingTamilCinemaVIDAMUYARCHI
Advertisement
Next Article