வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு - இன்றைய நிலவரம் ?
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது.
08:42 AM May 01, 2025 IST
|
Web Editor
Advertisement
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை போன்றவைகள் நிர்ணயிக்கப்படும். கடந்த சில மாதங்களாகவே வர்த்தக சிலிண்டர் விலை மட்டும் உயர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் விலை குறைந்தது.
Advertisement
அந்த வகையில் கடந்த 1ம் தேதி வணிக சிலிண்டரின் விலை ரூ.41 குறைக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.15.50 குறைந்து ரூ.1906-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Article