பாகிஸ்தானில் சிவப்பு கம்பள வரவேற்புகளுக்கு தடை - காரணம் இதுதான்..?
பாகிஸ்தானில் அரசு நிகழ்ச்சிகளில் சிவப்புக் கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பங்கேற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். அவர்கள் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பலம் இல்லை.
இதையும் படியுங்கள் : 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி மாற்றங்கள் – இன்று முதல் அமல்!
அவரை எதிர்த்து பிடிஐ கட்சி சார்பில் உமர் அயூப் கான் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் மார்ச் 3 நடைபெற்ற வாக்கெடுப்பில் ஷாபாஸ் ஷெரீஃப் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் மார்ச் 4ம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் சில மாற்றங்களை கொண்டுவந்தார்.
இதன் ஒருபகுதியாக அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் நடைமுறைக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தடையை பிரதமர் ஷாபஸ் ஷெரீஃப் பிறப்பித்துள்ளார்.
மார்ச் 13ம் தேதி பதவியேற்றுக் கொண்ட பாகிஸ்தானின் புதிய அதிபரான ஆசிஃப் அலி ஜர்தாரி தனது பதவியேற்பின் போது அரசு வழங்கக்கூடிய ஊதியம் தனக்கு வேண்டாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.