Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
05:33 PM Dec 01, 2025 IST | Web Editor
சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது .இதனால்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல்  பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisement

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானில ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiHeavyRainIMDlatestNewsRainUpdateRedAlertthiruvallurTNnews
Advertisement
Next Article