Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுக்குறையும்” - பாலச்சந்திரன் தகவல்!

05:01 PM Dec 12, 2024 IST | Web Editor
Advertisement

“வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும்” என தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயக்கரையில் 18 செ.மீ மழை பெய்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி என்பதால் வெப்பநிலை பகல் நேரத்தில் மாறுபாடாக உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்வதால், மேகக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழையின் காலமானது ஜனவரி 15 வரை கூட நீண்டுள்ளது.

வானிலை கணிப்புகள் 100 சதவீதம் சரியாக இருப்பது கிடையாது. இது அறிவியல் பூர்வமானது. வானிலை பலவித காரணிகளை கொண்டிருப்பதால், துல்லியமாக கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி அந்தமான் கடலோர பகுதியை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இன்றைய சூழலில் புயல், மழையை கணிக்கும் அறிவியல் முழுமையாக இல்லை.

வெளிநாடுகளில் புயலுக்குள் விமானங்களை செலுத்தி ஆய்வு செய்தபோதும், சரியாக கணிக்க முடியவில்லை. 150 கி.மீ, வேகம் என்ற கணிப்பு கூட பொய்யாகி 250 கி.மீ வேகத்தில் புயல் வீசியுள்ளது. தொழில்நுட்பம் மட்டும் போதாது. அறிவியல்பூர்வமான ஆய்வுகளும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
balachandarChennaiHeavyRainRainRedAlertWeatherWeatherUpdate
Advertisement
Next Article