Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிரான மனு - ஜூலை 26ல் விசாரணை!

02:44 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு
ஜூலை 26ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை
குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாயார் கமலா தாக்கல்
செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும்
சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விரைவாக விசாரிக்கக்கோரி அவரது வழக்கறிஞர் முறையீடு செய்தார்.

இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஏற்கெனவே தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று பட்டியலிடப்படாத நிலையில் சவுக்கு சங்கர் சார்பில் மீண்டும் முறையிடப்பட்டது. இதனையடுத்து, வரும் வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 26) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
goondas actHabeas corpusmadras highcourtsavukku shankar
Advertisement
Next Article