Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘அதிபர் பதவியை விட்டு விலக தயார்... ஆனால்’ - நிபந்தனை விதித்த ஜெலன்ஸ்கி!

“உக்ரைனில் அமைதி நிலவ, நான் பதவியை விட்டு விலக வேண்டும் என நீங்கள் விரும்பினால், நான் பதவி விலக தயார்” என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
07:52 AM Feb 24, 2025 IST | Web Editor
Advertisement

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளுக்குகிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.

Advertisement

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து இது போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இருப்பினும், போர் குறித்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என்பது பேசுபொருள் ஆகியுள்ளது.

இந்நிலையில் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கியேவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“உக்ரைனில் அமைதி நிலவ, நான் பதவியை விட்டு விலக வேண்டும் என நீங்கள் விரும்பினால், நான் பதவி விலகுகிறேன். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் நான் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன். அந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டால் உடனடியாக நான் இதை செய்கிறேன்.

மேலும், நான் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் சில விஷயங்களைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உக்ரைனின் நிலைப்பாட்டை ட்ரம்ப் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, ட்ரம்ப் ரஷ்யாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மத்தியஸ்தனம் செய்யும் நபராக மட்டும் ட்ரம்ப் இருக்கக்கூடாது.

500 பில்லியன் டாலர் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான அமெரிக்காவின் கடுமையான அழுத்தத்திற்கு அடிபணியத் தயாராக இல்லை. 10 தலைமுறை உக்ரேனியர்கள் பின்னர் செலுத்தப் போகும் ஒன்றில் நான் கையெழுத்திடப் போவதில்லை” என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நோட்டோ

நோட்டோ நாடுகளுக்கு நேட்டோ படைகள் பாதுகாப்பு தரும். குறிப்பாக நேட்டோ உறுப்பு நாட்டை யாராவது தாக்கினால், பதிலாக அனைத்து நேட்டோ நாடுகளும் ஆதரவாக வரும். இது தனக்கான பாதுகாப்பைத் தரும் என உக்ரைன் கருதுகிறது.

நோட்டோவில் உக்ரைன் உறுப்பினராக இணைய ரஷ்யா மறுப்பு தெரிவித்ததே போருக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Donald trumpNato MembershiprussiaUkraineVolodymyr Zelenskyywar
Advertisement
Next Article