Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிட தயாரா..? - மம்தா பானர்ஜியை வம்புக்கு இழுத்த பாஜக பிரமுகர்

01:22 PM Dec 23, 2023 IST | Web Editor
Advertisement

பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடத் தயாரா..? என மேற்கு வங்க பாஜக மகளிர் பிரிவு தலைவரான அங்கமித்ரா பவுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லி அசோகா ஓட்டலில் கடந்த 20ஆம் தேதி நடை பெற்றது. இந்த கூட்டத்தில் மாநில  முதலமைச்சர்களான மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

 மக்களவை தேர்தல் முடிவுக்குப்பின்  இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என மம்தா பானர்ஜி  அறிவித்திருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை,  இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என மம்தா பானர்ஜி  டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விருப்பம் தெரிவித்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்க பாஜகவின் மகளிர் பிரிவு  தலைவரான அங்கமித்ரா பவுல், 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு போட்டியிட சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது...


“ வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து மேற்கு வங்க முதலமைச்சரான  மம்தா பானர்ஜி போட்டியிட தயாரா..?  காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்குப் பதிலாக மம்தா பானர்ஜி போட்டியிடத் துணிந்தால், அவர் அதைச் செய்ய வேண்டும்” என அங்கமித்ரா பால் தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கேவை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி முன்மொழிந்த சில தினங்களில் பாஜக தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக இந்த சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
candidateMamta BanergeePM Modiprime ministerTMCWest bengal
Advertisement
Next Article