Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போர் நிறுத்தத்திற்கு தயார்.... ஆனால்!... ரஷ்ய அதிபர் புதின்

09:06 AM Jun 15, 2024 IST | Web Editor
Advertisement

போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக சர்வதேச  செய்தி நிறுவனங்கள் கூறியதாகக் கூறப்பட்டது. 

Advertisement

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதனிடையே, ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் விளாடிமிர் புதின், 5வது முறையாக அதிபராக கடந்த மே 7ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக சர்வதேச  செய்தி நிறுவனங்கள் கூறியதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் உக்ரைன் இதைச் செய்தால் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் உரையாற்றிய விளாடிமிர் புதின் கூறியதாவது, “கெய்வ் பகுதி உள்ளிட்ட நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களிலிருந்து துருப்புக்களை வாபஸ் பெற்றால், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் சேரும் திட்டத்தைக் கைவிட்டால் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு உத்தரவிடத் தயார். நாங்கள் அதை உடனடியாக செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
russiaUkraineVladimir Putin
Advertisement
Next Article