Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“47வது புத்தக கண்காட்சியில் ரூ.11 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!” - பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம்..!

10:01 PM Jan 21, 2024 IST | Web Editor
Advertisement

47வது புத்தக கண்காட்சியில் ரூ.11 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம் கூறியுள்ளார்.

Advertisement

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நந்தனம் YMCA மைதானத்தில் ஏற்பாடு செய்த 47வது புத்தக கண்காட்சி ஜனவரி 03 ஆம் தேதி தொங்கி  இன்றுடன் (ஜனவரி 21ம் தேதி) நிறைவு பெற்றது. இதையடுத்து, சிறுகதைகள், நாவல்கள், இலக்கியம் சார்ந்த நூல்கள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்கும் வகையிலான புத்தகங்கள் கிடைப்பதால் சென்னை புத்தக கண்காட்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இது குறித்து பப்பாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதையும் படியுங்கள் : கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் – கூடை பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி…!

அப்போது பேசிய அவர்: "புத்தக கண்காட்சியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, வாசகர்கள் மழையிலும் கூடை பிடித்துக்கொண்டு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மழையின் போதும் நீண்ட வரிசையில் நிற்கும் அளவுக்கு வாசகர்கள் வந்தனர். புதிய புத்தகத்தை ஒவ்வொரு பதிப்பகமும் வெளியிட்டுள்ளது.

மொத்தமாக 11 லட்சம் வாசகர்கள் வந்துள்ளார்கள். 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச டிக்கெட்களை வழங்கி இருந்தோம். மேலும், சுமார் ரூ.11 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு பள்ளி கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாக வந்தார்கள்" எனக் கூறினார்.

Tags :
47th Chennai International Book FairbabaciBook FairPresident Kavita ChokkalingamReaders
Advertisement
Next Article