RCBvsSRH | டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் ஜிதேஷ் சர்மா - ஹைதராபாத் அணி பேட்டிங்
ஐபிஎல் போட்டியின் 65வது லீக் சுற்று போட்டி இன்று(மே.23) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஜிதேஷ் சர்மா தலைமையிலான பெங்களூர் அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடக்கவுள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள பெங்களூர் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். ஹைதராபாத் அணி ஏற்கெனவே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
பெங்களூர் அணி பிளேயிங் லெவன்:-
விராட் கோலி, ஃபில் சால்ட், மயங்க் அகர்வால், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், குருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, யாஷ் தயாள், சுயாஷ் சர்மா. (ரஜத் படிதார் இம்பேக்ட் பிளேயராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.)
ஹைதராபாத் அணி பிளேயிங் லெவன்:-
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பேட் கம்மின்ஸ்
ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்கா.