RCBvsRR | களத்தில் கர்ஜித்த ‘கிங்’ கோலி - ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கு!
நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை இன்று(ஏப்ரல்.24) சின்னசுவாமி மைதானத்தில் எதிர்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிஸில் பெங்களூர் அணி சார்பில் தொடக்க வீரர்களாக விராட் கோலி, ஃபில் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். இதில் சால்ட் 26 ரன்கள் அடித்து வனிந்து ஹசரங்கா சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். இவருக்கடுத்து விராட் கோலியுடன் தேவதத் படிக்கல் கை கோர்த்து அதிரடியாக விளையாடி 50 ரன்கள் அடித்து சந்தீப் சர்மாவிடம் விக்கெட்டை இழந்தார்.
ஆரம்பத்தில் இருந்து களத்தில் கர்ஜித்த விராட் கோலி, 8 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 70 ரன்கள் குவித்து ஆர்ச்சரிடம் ஆட்டமிழந்தார். இதையடுத்து டிம் டேவிட் 23 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார். கேப்டன் ரஜத் படிதார் ஒரு ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்பு வந்த ஜிதேஸ் சர்மா 20* ரன்கள் அடித்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி 206 ரன்களை சேஸிங் செய்ய உள்ளது.