RCBvsDC | பெங்களூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு!
நடப்பாண்டி ஐபிஎல் சீசனுக்கான லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று(ஏப்ரல்.10) ரஜத் படிதார் தலைமையிலான பெங்களுர் அணி அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்கிறது. பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை லீக் சுற்றில் பெங்களூர் அணி 4 போட்டிகளில் பங்கேற்று 3 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதே போல் டெல்லி அணி இதுவரை மூன்று போட்டிகளில் பங்கேற்று மூன்றிலும் வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
இன்று நடைபெறவுள்ள போட்டியில் இரு அணிகளுக்கு இடையேயான டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸை வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பெங்களூர் அணியில், விராட் கோலி, ஃபில் சால்ட் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் விளையாட உள்ளனர்.
டெல்லி அணி சார்பில், ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.