Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘ராயன்’ மேக்கிங் வீடியோ!

03:44 PM Aug 08, 2024 IST | Web Editor
Advertisement

ராயன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

Advertisement

‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 50-வது படமாக ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்தார். இப்படத்தில் அவருடன் இணைந்து துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் கடந்த 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து 2வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் வேட்டையிலும் கலக்கி வருகிறது. இப்படம், உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடியைத் தாண்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ராயன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

Tags :
ar rahmanDhanushMaking VideoRaayanSun Pictures
Advertisement
Next Article