Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இணையத்தில் வைரலாகும் 'குபேரா' திரைப்படத்தில் ராஷ்மிகாவின் பர்ஸ்ட் லுக்!

07:39 PM Jul 06, 2024 IST | Web Editor
Advertisement

'குபேரா' திரைப்படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் வீடியோ  வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் 'குபேரா'. சேகர் கம்முலா இயக்கும் இந்த திரைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து நாகர்ஜூனாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியாகியது. படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை மற்றும் பல இடங்களில் நடைப்பெற்ற வருகிறது. நேற்று ராஷ்மிகா மந்தன்னாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள் : ஆசிரியருக்காக பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள் - தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

அந்த வீடியோவில் ராஷ்மிகா ஓர் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பெட்டியை தோண்டி வெளியே எடுக்கிறார். அப்பெட்டி முழுவதும் பணம் நிறைந்து இருக்கிறது. அவர் அந்த பெட்டியை திறந்து சரிபார்த்து விட்டு , சந்தோஷத்துடன் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு செல்கிறார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த திரைப்படத்தில் தனுஷின் கதாப்பாத்திரம் ஒரு பிச்சைக்காரன் தோற்றத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
DhanushKuberanagarjunarashmika mandanaSekharKammulas
Advertisement
Next Article