Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘ரசவாதி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

08:08 AM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் அர்ஜூன் தாஸ் நடித்த 'ரசவாதி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மௌன குரு, மகாமுனி போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் சாந்தகுமார். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ரசவாதி'. இந்த திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், சுஜித் சங்கர், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், ரம்யா, ஜி.எம் சுந்தர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் சரவண இளவரசு சிவா இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். 'ரசவாதி' திரைப்படம் கடந்த மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த சுஜித் சங்கர் கவனம் பெற்றார்.

இதையும் படியுங்கள் :உசிலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற பில் கிளார்க்! – அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

சித்த வைத்தியராக சதாசிவ பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் சந்திக்கும் பிரச்னைகளே இந்த திரைப்படத்தின் கதை. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 'ரசவாதி'  திரைப்படம் நாளை மறுநாள் (ஜூன் 21) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AnnouncementArjun DasmovieottRasavadirelease dateSanthakumarSujith ShankarTanya Ravichandran
Advertisement
Next Article