Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா!

10:04 AM Mar 25, 2024 IST | Web Editor
Advertisement

ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் 84 வது
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பால் குடம், காவடி, வேல் காவடி, சப்பரக்காவடி, பறவை காவடி எடுத்து தங்களது நேத்திக்கடனை செலுத்தினர்.

Advertisement

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோயில் உள்ளது.  இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இந்தாண்டு 84 வது பங்குனி உத்திர திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இந்த நிலையில்  பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் நொச்சிவயல் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, வேல் காவடி, பறவை காவடி, சப்பர காவடிகளை எடுத்து பெரியார் நகர், அரண்மனை, வண்டிக்கார தெரு வழியாக ராமநாதபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வழி விடு முருகன் ஆலயத்திற்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதற்காக ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, இன்று மாலை ஸ்ரீ வழி விடு முருகன் ஆலயத்தின் முன்பாக பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

Tags :
#panguni uthiramdevoteesfestivalmurugan templeRamanathapuramValividu Murugan Temple
Advertisement
Next Article