சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்..!
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்படவில்லை என்றும், அப்போதிலிருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் அக்டோபர் 2ம் தேதி வெளியிடப்பட்டன என்றும், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாவிட்டால், 69% இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும், எனவே, இன்றைய சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தடைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.