Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிறை தெரிந்தது! நாளை முதல் ரமலான் நோன்பு துவக்கம்!

09:23 PM Mar 11, 2024 IST | Web Editor
Advertisement

பிறை தென்பட்ட நிலையில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார்.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க நோன்பு கடைபிடிப்பர். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால் முஸ்லிம்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிப்பார்கள்.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் உலகம் முழுக்க இன்று தொடங்கியது. இதையடுத்து நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி! – பிரதமர் மோடி வாழ்த்து

ரமலான் மாதத்தின் பிறை பார்க்க வேண்டிய நாளான இன்று பிறை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மத் அய்யூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது.

"ஹிஜ்ரி 1445 ஷாபான் மாதம் 29ம் தேதி திங்கட்கிழமை ஆங்கில மாதம் 11.03.2024 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை நாகூர் மற்றும் திருச்சியில் காணப்பட்டது. ஆகையால் செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 12-03-2024 தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஷபே கத்ர் 06-04-2024 சனிக்கிழமை மற்றும் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களின் மத்தியிலுள்ள இரவில் ஆகும்.இதன்படி நாளை முதல் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குகிறது."

இவ்வாறு தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மத் அய்யூப் தெரிவித்துள்ளார்.

Tags :
fastingMuslimsRamadanRamadan2024RamadanKareemramdhan
Advertisement
Next Article