Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரம்ஜான் பண்டிகை : தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

ரம்ஜான் பண்டிகையையொட்டி தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு...
05:48 PM Mar 22, 2025 IST | Web Editor
Advertisement

ரம்ஜான் பண்டிகை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

அதன்படி தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06037) மார்ச் 28 அன்று தாம்பரத்தில் இருந்து மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.00 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில் (06038) மார்ச் 31 அன்று கன்னியாகுமரியில் இருந்து இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.55 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 14 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். ‌இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) காலை 8 மணிக்கு துவங்குகிறது.

Tags :
KANNIYAKUMARIRamadan Festivalspecial trainTambaram
Advertisement
Next Article