Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரம்ஜான் பண்டிகை |  பள்ளி மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றம்!

08:02 AM Mar 30, 2024 IST | Web Editor
Advertisement

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதற்கிடையே, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப். 19-ம் தேதிநடைபெற உள்ளது.  எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

புதிய தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருந்தது.  அதன்படி 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும்.  ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஏப்.10ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு ஏப்.22ம் தேதிக்கும்,  ஏப்.12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்.23ம் தேதிக்கும் மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

Tags :
Exam DateExaminationLok Sabha Election2024Ramazan FestivalstudentsTN Govt
Advertisement
Next Article