Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு தலைமை கொறடாவாக #Ramachandran நியமனம்!

07:10 PM Sep 29, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடாவாக திமுகவின் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு நேற்று ஒப்புதல் அளித்தார். அதன் அடிப்படையில் இன்று (29.9.2024) மதியம் 3.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துவைர்த்தார்.

இதன்படி முறையே ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி செழியன், எஸ்.எம்.நாசர் வரிசையாக அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். கோவி.செழியனுக்கு உயா்கல்வித்துறையும், வி.செந்தில்பாலாஜிக்கு மின்சாரத்துறையும், ஆ.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மையினா் நலன்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக சாா்பில் அரசு தலைமைக் கொறடாவாக இருந்த கோவி.செழியன் புதிதாக அமைச்சராகியுள்ளதை அடுத்து தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடாவாக திமுகவின் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடா்பாக சட்டப்பேரவைச் செயலா் செயலா் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடாவாக திமுகவின் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவா் கா.ராமச்சந்திரன், அமைச்சரவையில் இருந்து அவா் நீக்கப்பட்ட நிலையில், அரசு தலைமைக் கொறடாவா இருந்த கோவி.செழியன் உயா்கல்வித் துறை அமைச்சரானார். இந்நிலையில் தான் அரசு தலைமைக் கொறடாவா பதவி கா.ராமச்சந்திரnஉக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
assemblyChief WhipK Ramachandrannews7 tamilTN Govt
Advertisement
Next Article