"அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துகள்" - பிரதமர் நரேந்திர மோடி பதிவு!
ராம நவமியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
09:07 AM Apr 06, 2025 IST
|
Web Editor
Advertisement
ராமரின் அவதார தினத்தை ராம நவமி, ராம ஜெயந்தி என கொண்டாடி வருகிறோம். இந்திய முழுவதும் ராம நவமி திருநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Advertisement
இந்த நிலையில் ராம நவமியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துகள்.
பிரபு ஸ்ரீராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும், நமது அனைத்து முயற்சிகளிலும் நம்மை வழிநடத்தட்டும். இன்று மாலையில் ராமேஸ்வரத்தில் இருப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்"! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Article