Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை பேரணி நடத்தவுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
09:30 AM May 09, 2025 IST | Web Editor
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை பேரணி நடத்தவுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement

பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்தவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ பாகிஸ்தானின் அத்துமீறல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள்,  அமைச்சர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். இந்த பேரணி தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெறும்.

இந்த பேரணி இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும். தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Indian ArmyMKStalinrallyTheevu ThidalTNGovt
Advertisement
Next Article