Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரக்‌ஷா பந்தன் - களை கட்டிய ராக்கி விற்பனை! சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட #BlinkIt CEO!

03:44 PM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

ரக்‌ஷா பந்தனுக்காக ஒவ்வொரு நிமிடமும் 693 ராக்கிகள் பிளிங்கிட் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் திண்ட்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகை காலத்தின் தொடக்கமாக ரக்‌ஷா பந்தன் அமைந்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபம் என அடுத்தடுத்து ஜனவரி வரை இனி பண்டிகைகள் வரிசை கட்டி கொண்டாடப்படும். இந்நிலையில், ரக்‌ஷா பந்தனை ஒட்டி நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் குறித்து ஆன்லைன் வர்த்தக தளமான BlinkIt-ன் தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் திண்ட்ஷா மனம் திறந்துள்ளார்.

அதில், ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டத்திற்காக, இந்தியர்கள் ஒரு நிமிடத்திற்கு 693 ராக்கிகளை ஆர்டர் செய்வதாக கூறியுள்ளார். மேலும் ராக்கிகள் மட்டுமல்லாது, BlinkIt வாயிலாக வீட்டு உபயோகப்பொருள்களும், சாக்லேட் விற்பனையும் உச்சம் தொட்டுள்ளது. விநாடிக்கு 693 ராக்கிகள் என்பது குறிப்பிடத்தகுந்த அளவு என்றாலும், உண்மையான விற்பனை அளவு நாடு முழுவதும் விநாடிக்கு 10,000 ராக்கிகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சகோதரனுக்கான பரிசுகள் என்ற வார்த்தை அதிகமாக தேடப்பட்டதோடு, லட்டுகள், குலாப் ஜாமூன்கள் போன்ற பிரபலமான இனிப்புகளை விட காஜு கட்லி இனிப்பின் விற்பனை இந்த ஆண்டு களைகட்டியது. இந்த விற்பனை அதிகரிப்பு, நாட்டில் ஆழமான வேரூன்றிய கலாச்சார பாரம்பரியங்கள் உலகளவில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

Tags :
Albinder DhindsaBlinkitchocolate salesfestive seasonimpressive statisticsnews7 tamilNews7 Tamil UpdatesOrdersrakhisraksha bandhan
Advertisement
Next Article