Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாநிலங்களவை தேர்தல் | திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு!

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
12:37 PM Jun 10, 2025 IST | Web Editor
மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
Advertisement

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்​களவைக்கு தேர்வு செய்​யப்​பட்ட வைகோ, பி.​வில்​சன், சண்​முகம், முகமது அப்​துல்​லா, அன்​புமணி மற்​றும் சந்​திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்​காலம் வரும் ஜூலை 27-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. இதையடுத்​து, காலி​யாக உள்ள 6 இடங்​களுக்​கான தேர்​தலை தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யில், எம்​எல்​ஏக்​கள் பலம் அடிப்​படை​யில் 6 இடங்​களில் 4 திமுக​வுக்​கும், இரண்டு அதி​முக​வுக்​கும் கிடைக்​கும். அதன் அடிப்​படை​யில், திமுக சார்​பில் 4 இடங்​களுக்கு மக்​கள் நீதி மய்​யம் கட்​சித்தலை​வர் கமல்​ஹாசன், பி.​வில்​சன், கவிஞர் சல்​மா, சிவலிங்​கம் ஆகியோர் அறிவிக்​கப்பட்டனர்.

Advertisement

அதி​முக சார்​பில், தனபால் மற்​றும் ஐ.எஸ்​.இன்​பதுரை ஆகியோர் அறிவிக்​கப்​பட்​டனர். கடந்த ஜூன் 2-ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்​புமனுத்​தாக்​கல் தொடங்​கியது. தொடர்ந்து, கடந்த ஜுன் 6ம் தேதி திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யதனர். அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வில்சன், சல்மா மற்றும் சிவலிங்கம் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதேபோல், அதிமுக வேட்பாளர்களான தனபால் மற்​றும் ஐ.எஸ்​.இன்​பதுரை ஆகியோர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதேபோல், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகின்றனர். வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை மறுநாள் (ஜுன்.12) கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு பிறகு மாநிலங்களவை தேர்வாகியுள்ளவர்களு வெற்றிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
ADMKDMKKamal haasanLatest Newsnews7 tamilRajya sabhaRajya Sabha election
Advertisement
Next Article