Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘#GOAT’ -ஐ பாராட்டிய ரஜினிகாந்த்!

01:43 PM Oct 19, 2024 IST | Web Editor
Advertisement

விஜய்-ன் தி கோட் திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

Advertisement

விஜய்-ன் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கினார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்.5-ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில் இப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

உங்கள் அழைப்பிற்கும், கோட் திரைப்படத்தை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி தலைவா!!!. முழு மனதுடன் பாராட்டியதற்கு மீண்டும் நன்றி. என்றென்றும் நன்றியுடன், எல்லா அன்பையும் உங்களுக்கு அனுப்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
goatRajinikanthvenkat prabhuvijayWishes
Advertisement
Next Article