Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரஜினிகாந்திற்கு விளம்பரம் தேவையில்லை - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சு!

08:27 PM Feb 05, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் ரஜினிகாந்திற்கு விளம்பரம் தேவையில்லை என்றும், ஜெயிலர் படம் அரசியல், மதம் சம்மந்தமான படம் இல்லையென்றாலும், அது நல்ல வரவேற்பை பெற்றதாகவும் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

லால் சலாம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், விக்ரம், விவேக், பிரசன்னா, தங்கதுரை, தம்பி ராமையா, செந்தில் நிரோஷா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,

“தேர் திருவிழா என்பது ஒரு ஊர். அந்த ஊரில் கிரிக்கெட் விளையாட்டால் என்ன நடக்கிறது மற்றும் விளையாட்டு விபரீதமாக முடித்தால் என்ன நடக்கும் என்பது தான் படத்தின் கதை.
எனக்கு 3 படத்தில் இருந்தே விஷ்ணுவை நன்றாக தெரியும். நிறைய சிந்திப்பார். குறைவாக பேசுவார். லால் சலாம் படத்திற்கு திசை எங்கும் பரவட்டும் என்ற தலைப்பு தான் முதலில் இருந்தது. இந்த படம் கஷ்டப்பட்டு எடுத்த படம். விளையாட்டில் நீ பெரியது, நான் பெரியது என்று வரும்போது தான் போட்டி உண்டாகிறது. அந்த போட்டி தொழிலாக மாறுகிறது. அந்த பிசினஸ் அரசியலாக மாறுகிறது. அந்த அரசியல் தான் வெறியாக மாறுகிறது. இதுதான் லால் சலாம் படத்தின் கதை.

படம் ஒரு சிறிய அரசியல் பேசுகிறது. ஒவ்வொரு குடிமகனாக இருக்கும் அனைவருக்கும் அரசியலில் பங்கு உள்ளது. செந்தில் சார் உடைய கதாபாத்திரம் தான் இந்த படத்துடைய உணர்வு. அவரை வைத்து தான் கதை நகருகிறது. தம்பி ராமையா செட் குள்ள வரும்போதே ரொம்ப vibe மற்றும் பாஸிட்டிவ் வாக தான் இருப்பார். Encyclopedia மாதிரி நிறையா விசயங்கள் பேசுவார். எது பேசினாலும் எமோஷனல் ஆக பேசுவார். ஊர் சந்தோசம் தான், எங்களின் சந்தோசம் என்றது தான் அவரின் கதாபாத்திரம்.

திவாகர் இந்த படத்தில் கிரிக்கெட் commentry பண்ணிருக்காரு. எந்த ஒரு பட செட்டிலும் சண்டை நடப்பது இயல்பு. ஆனால் எங்களுடைய செட்டில் ஒரு முறை கூட சண்டை வரவில்லை. ஒற்றுமையாக இருந்தோம். ரஹ்மான் சாரை கால் பண்ணி திட்டினேன். 90s ரஹ்மான் உடைய come back தான் லால் சலாம். அப்பாவை (ரஜினிகாந்த்) பற்றி இப்போ பேச வேண்டானு நினைக்கிறேன். நான் ஆடியோ வெளியிட்டு விழாவில் இப்படி பேசுவது பற்றி அவருக்கு தெரியாது.

விமானநிலையம் போகும் போது அவரிடம் லால்சலாம்காக strategy-ஆ என கேள்வி கேட்டனர். அப்பாவுக்கு விளம்பரம் தேவையில்லை. ஜெயிலர் என்ன அரசியல், மதம் சம்மந்தமான படமா? அது ஓடவில்லையா? அவரிடம் இந்த கேள்வி கேட்டது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த படம் தான் விக்ராந்தை அழைத்து எல்லாருடைய லைஃப்லையும் ஏற்ற தாழ்வு இருக்க தான் தெரியும்.” என தெரிவித்தார்.

Tags :
#LalSalaamaudio launchLal Salaam From Feb 9Lal Salaam Trailer | #Aishwarya RajinikanthNews7Tamilnews7TamilUpdatesRajinikanthVishnu Vishal
Advertisement
Next Article