இமயமலையில் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான் உள்ளிடோர் நடித்த ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆக.14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படியுங்கள் : விஜயை கண்டித்த நீதிமன்றம் – இணையத்தில் அனல் பறக்கும் விவாதம்!
அவரின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும், ரஜினி இமயமலைக்கு சென்று வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், கடந்த முறை 'வேட்டையன்' படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். 'கூலி' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததன் காரணமாக செல்லவில்லை. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.