Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜஸ்தானில் இன்று நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல் - இறுதிகட்டமாக 3 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

12:56 PM Nov 06, 2023 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 6-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

Advertisement

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸும்,  ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் முனைப்பு காட்டி வருகின்றன.  மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக சாா்பில் களம் காணும் 83 பேர் கொண்ட முதல் பட்டியலையும்,  அதனைத் தொடர்ந்து 41 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலையும் வெளியிட்ட பாஜக,  நவம்பர் 2-ம் தேதி 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும்,  4 ஆம் தேதி 2 வேட்பாளர்கள் மட்டுமே அடங்கிய 4-ம் கட்ட பட்டியலையும்,  5ஆம் தேதி 15 பேர் கொண்ட 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று 3 வேட்பாளர்கள் மட்டுமே கொண்ட 6 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.  இதில் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு வந்த கிரிராஜ் சிங் பாரி தொகுதியிலும்,  தீபக், பார்மெர் தொகுதியிலும் மற்றும் அருண் சௌத்ரி, பச்பத்ரா தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் நவம்பர் 25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. டிசம்பர் 3 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article