ராஜஸ்தானா? கொல்கத்தாவா? எந்த அணியில் இணைவார் ராகுல் டிராவிட்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்த ஆண்டுதான் இந்தியர்களின் கனவை நினைவாக்கியது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. சாம்பியன் பட்டம் வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் தங்களது முடிவுகளை அறிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியின் கோப்பைக் கனவை நிறைவேற்றிவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.
முன்னதாக கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றதையடுத்து, கொல்கத்தா அணியின் ஆலோசகர் பதவிக்கு ராகுல் டிராவிட்டை நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் முயன்று வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடதக்கது.