Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜஸ்தான் தேர்தல் : பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, சிலிண்டர் விலை ரூ.500 - அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட காங்கிரஸ்

07:23 PM Oct 25, 2023 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்  நடைபெற உள்ள நிலையில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, சிலிண்டர் விலை ரூ.500  போன்ற அதிரடி அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

Advertisement

அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார்.

மேலும்  ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்  என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தேர்தல் தேதியை நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மிசோரம், தெலங்கானாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தௌசா மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கடந்த வாரம்  பிரியங்கா தேர்தல் பேரணியில் ஈடுபட்டார். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள்  தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் அளித்து வருகின்றன.


இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது முதலமைச்சர் அசோக் கெலாட் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும், இது இரண்டு அல்லது மூன்று தவணைகளாக பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முக்கியமான தேர்தல் வாக்குறுதியை  அறிவித்துள்ளார்.  அதேபோல 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தமிழ்நாடு , கர்நாடகாவைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் மகளிர் உரிமைத் தொகை குறித்த தேர்தல் வாக்குறுதியை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Ashok Ghelotassembly electionElectionpriyanka gandhiPriyanka Gandhi VadraRajasthanSachin Pilot
Advertisement
Next Article