Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரபாஸ் நடிக்கும் 'ராஜாசாப்' | வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் குழப்பத்தில் ரசிகர்கள்...!

03:22 PM Jan 15, 2024 IST | Web Editor
Advertisement

பிரபாஸ் நடிக்கும் ‘ராஜாசாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Advertisement

மாருதி தசாரி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ‘தி ராஜாசாப். பீபுள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வழக்கமாக ஆங்கிலத்தில் ‘PRABHAS' என்று இடம்பெறும் பிரபாஸின் பெயர் இதில் கூடுதலாக ஒரு ‘எஸ்’ சேர்க்கப்பட்டு ‘PRABHASS' என்று இடம்பெற்றுள்ளது. தொடர் தோல்விகளால் நியூமராலஜி காரணங்களுக்காக தனது பெயரை பிரபாஸ் மாற்றிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து பிரபாஸ் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது பிரபாஸ் நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்குப் பிறகு ‘தி ராஜாசாப்’ படத்தின் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
Advertisement
Next Article