'சலார்' திரைப்படத்தின முதல் டிக்கெட்டை பெற்றது யார் தெரியுமா?
'சலார் திரைப்படத்தின முதல் டிக்கெட்டை இயக்குநர் ராஜமௌலி பெற்றுக் கொண்டார்.
கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து 'சலார்' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
டிரைலரிலும் அதைக் காண முடிந்தது. சலார் திரைப்படம் வரும் டிச.22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்தது. டிரைலர் வெளியான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம் 2 மணி நேரம், 55 நிமிடங்கள், 22 நொடிகள் ரன்னிங் டைமாக உருவாகியிருக்கிறது. தீவிரமான சண்டைக்கு தயாராகுங்கள் என படக்குழு கூறியுள்ளது.