#RainAlert | காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையை கருமேகங்கள் சூழந்த நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இன்றும் (டிச.13) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் விவரங்களை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.