Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert | சென்னை உள்பட 33 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

05:01 PM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, இன்று லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த 3 நாட்களில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் எனவும் இதனால் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 33 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
news7 tamilrain alertRain UpdaterainfallrainsTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article