Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert | 12 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?

08:25 PM Dec 29, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 4-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை பெய்வது குறைந்து வெயில் வாட்டி வருகிறது. இருப்பினும் இரவு நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

இதையும் படியுங்கள் : 2024-ல் தமிழ் சினிமாவை மிரட்டிய வில்லன்கள்!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article