#RainAlert | மக்களே உஷார்... 19 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை!
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 4-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை பெய்வது குறைந்து வெயில் வாட்டி வருகிறது. இருப்பினும் இரவு நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் – ஆளுநரிடம் த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்!
இந்த நிலையில், மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மாலை 4 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.