#RainAlert | மக்களே உஷார்... காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மழை சற்று தணிந்த நிலையில் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் அதிகாலை, இரவு நேரங்களில் பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படுகிறது.
இதையும் படியுங்கள் : 4வது டி20 | இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 30″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.