Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Rainalert - உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

03:27 PM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுதத நாட்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்"

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ViralVideo | மகன் வேலைக்குச் செல்லாததால் ஆட்டோ ஓட்டுநரான மூதாட்டி | நள்ளிரவு 1.30 மணி வரை உழைக்கும் வீடியோ!

இன்று இரவு வரை மன்னார் வளைகுடா தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Tags :
lightningNew low pressureNews7Tamilnews7TamilUpdatesRainRainAlerttamil naduThunder
Advertisement
Next Article